மலேசியா: மலேசியா தலைநகர் கோலாலம்பூர் மதரசா பள்ளிக்கூடத்தில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மாணவர்கள் உள்பட 25 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் ஜாலன் தாடக் கேராமத் என்ற பகுதியில் தஹ்பீஸ் தாருல் குரான் இட்டிஃபாகியா (Tahfiz Darul Quran Ittifaqiyah) என்ற பெயரில் மதரசா செயல்பட்டு வருகிறது. 2017 செப்டம்பர் 14 அதிகாலை சுமார் 5.30 மணியளவில் அந்த மதரசாவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் சிக்கி மதரசா விடுதியில் இருந்த 23 மாணவர்கள் மற்றும் 2 விடுதி காப்பாளர்கள் பலியாகியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) அல்லாஹ் அவர்களுக்கு சுவனப்பூங்காவை வழங்குவானாக!