மலேசியா மதரசா தீ விபத்தில் தனது 3 மகன்களையும் பறிகொடுத்த விதவை தாய்

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி நடந்த தீ விபத்தில் 25 பேர் இறந்தனர். அதில் 29 வயதான  மெஸ்வானி என்ற விதவைப்பெண்ணின் 3 மகன்களும் உயிரிழந்துள்ளனர். 8 வருடங்களுக்கு முன் மெஸ்வானியின் கணவர் முஹமது சாஹித் இறந்து விட்டார். பின் தனது 3 மகன்களையும் மார்க்கப்பணியாற்ற ஆலிம்களாக்க மதரசாவில் சேர்த்துள்ளார். உறவினர் உதவியுடன் குடும்பத்தை நடத்தியுள்ளார். இந்நிலையில் தீ விபத்தில் 3 மகன்களும் இறந்ததை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அல்லாஹ் அவருக்கு தாங்கக்கூடிய சக்தியை கொடுப்பானாக. அவரது இறந்த 3 மகன்களுக்கும் சொர்க்கத்தை கொடுப்பானாக.

இறந்த அவரது மகன்கள் முகமது சியாபித் ஹைகல் (வயது 13) , முகமது ஹாபிஸ் இஸ்கந்தர் (வயது 11) ,  முகமது ஹாரிஸ் (வயது 10).

Comments

Popular posts from this blog

பர்மா பயங்கரவாத அரசின் இராணுவத்தால் இனவழிப்பு செய்யப்படும் முஸ்லீம்கள்

மலேசியா  மதரசாவில் பயங்கர தீ விபத்து -  25 பேர்  பலி

தவளைகளை கொன்றால் பல நோய்கள் உருவாகும் என 1400 வருடங்களுக்கு முன்பே எச்சரித்த நபி