பர்மா பயங்கரவாத அரசின் இராணுவத்தால் இனவழிப்பு செய்யப்படும் முஸ்லீம்கள்

பர்மாவின் பௌத்த மத பயங்கரவாத அரசின் இராணுவம் தினந்தோறும் அப்பாவி முஸ்லிம்களை கொன்று குவித்து வருகிறது.

மியன்மாரில் ராக்கின் பகுதியில் வசிக்கும் ரொஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக இனவழிப்பு செயன்முறையை அந்நாட்டு இராணுவம் முன்னெடுத்து வருகிறது.

* மியன்மாரின் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டிருக்கிறது.

* பெரும்பான்மை  பௌத்தர்களைக் கொண்ட மியன்மாரில் முஸ்லிம்கள் வாழ , பௌத்த பயங்கரவாத அரசு பல கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

* கடந்த இரு வாரங்களில் மியான்மர் ராணுவத்தின் தாக்குதலில் இருந்து தப்பி வங்கதேசத்துக்குள் செல்லும் இஸ்லாமியரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

* அங்கு நடக்கும் ராணுவ தாக்குதலின் காரணமாக, பிறந்து ஓரிரு நாள்களே ஆன குழந்தைகள், ராணுவத்தின் தாக்குதலில் காயமடைந்தவர்கள் உள்ளிட்ட பலரும் அகதிகளாகச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். 

* கை கால்களை இழந்தவர்கள், எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள் எனப் பலவகைப்பட்டோரும் இடம்பெயர்ந்து வருகிறார்கள்.

* சுமார் 2 இலட்சத்து 70 ஆயிரம் ரொஹிங்கியா முஸ்லிம்கள் பங்களாதேஷில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான முகவரகம் தெரிவித்துள்ளது.

*நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டு பலநூறுபேர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதாக ரோஹிஞ்சா அகதிகள் தெரிவிக்கும் புகார்கள் ஐநா தூதரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

* கொடூரமான கொலைகள், மோசமான பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட மோசமான மனித உரிமை மீறல்கள் தமக்கு இழைக்கப்பட்டதாக பர்மா முஸ்லிம்கள் BBC செய்தி நிறுவனத்திற்க்கு தெரிவித்துள்ளனர்.

* அடிப்படை மனித உரிமைகளும் மறுக்கப்படுகின்றன.

வேண்டாத முஸ்லிம் சிறுபான்மையினரை பர்மிய இராணுவத்தினர் கையாளும் விதம் குறித்த தகவல்களை இரகசியமாக வைக்கவே பர்மிய அரசு முயல்கிறது.

Comments

Popular posts from this blog

மலேசியா  மதரசாவில் பயங்கர தீ விபத்து -  25 பேர்  பலி

தவளைகளை கொன்றால் பல நோய்கள் உருவாகும் என 1400 வருடங்களுக்கு முன்பே எச்சரித்த நபி