தாஜ்மஹால் கல்லறைதான்’ - தொல்லியல் துறை ஒப்புதல்!
ஆக்ராவின் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள தாஜ்மாஹால் ஒரு கல்லறைதான் என்று மத்திய தொல்லியல் ஆய்வுத் துறை முதன்முறையாகக் கூறியுள்ளது.
தாஜ்மஹால் இருந்த இடத்தில் முன்னொரு காலத்தில் சிவன் கோயில் ஒன்று இருந்ததாகவும், எனவே இந்துக்கள் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கூறி ஆக்ரா சிவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் 6 பேர் கடந்த 2015-ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்திருந்த ரிட் மனுவில், ராஜா ஜெய்சிங் என்ற மன்னர் கட்டியிருந்த தேஜோமஹலாய் (Tejomahalay) என்ற சிவன் கோயிலை இடித்துவிட்டே மன்னர் ஷாஜகான், அந்த இடத்தில் தனது மனைவி மும்தாஜுக்கு கல்லறை அமைத்திருந்ததாக குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மத்திய அரசும், மத்திய தொல்லியல்துறையும் பதிலளிக்க உத்தரவிட்டது. அந்த இடத்தில் கோயில் இருந்ததற்கான எந்தவொரு தகவலும் தங்களிடம் இல்லை என்று மத்திய அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் சமீபத்தில் பதில் மனுத் தாக்கல் செய்த தொல்லியல் துறை, தாஜ்மஹால் இருந்த இடத்தில் சிவன் கோயில் இருந்ததற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை. தாஜ்மஹால் ஒரு கல்லறைதான் என்று கூறியுள்ளது. முதன்முறையாக மத்திய தொல்லியல் துறை சார்பில் தாஜ்மஹால் ஒரு கல்லறைதான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள முகலாயர் காலத்து அரண்மனைகளும், பள்ளிவாசல்களும் இந்து கோயில்களை இடித்து கட்டப்பட்டவை என்று இந்துத்துவா வாதிகளும் சங் பரிவார் அமைப்புகளும் பரப்பி வந்த பொய் அவர்கள் ஆட்சியிலேயே முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்துத்வா பொய்யர்களுக்கு சவுக்கடி கொடுத்த தொல்லியல் துறைக்கு பாராட்டுகள்!
Comments
Post a Comment