தாஜ்மஹாலை தேஜோ மஹாளய கோயிலாக மாற்றியவர்கள்- என்ன நடக்கிறது இந்தியாவில் ?



ஆக்ரா: இந்து மஹா சபையின் அலிகார் பிரிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள புத்தாண்டு காலண்டரால் சர்ச்சை வெடித்துள்ளது. இந்த நாள்காட்டியில் மசூதிகள், தாஜ்மஹால் உள்ளிட்ட அனைத்தும் இந்து ஆலயங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் தாஜ்மஹாலை தேஜோ மஹாளய கோயில் எனவும், மெக்காவை மெக்காய்ஸ்வர் மஹாதேவ் கோயில் எனவும், மத்திய பிரதேஷின் கமல் மௌலா மசூதியை, போஜ்சாலா எனவும், காசியின் கியான்வ்யாபி மசூதியை விஸ்வநாதர் கோயில் எனவும், குதுப் மினார், விஸ்ணு ஸ்தம்பம் எனவும், பாபர் மசூதி, ரேம் ஜென்ம பூமி எனவும், ஜான்பூரின் அடாலா மசூதி, அட்லா தேவி கோயில் எனவும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடியும், உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் நாட்டை இந்துக்களின் நாடாக்க தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த காலண்டர் அவர்களின் இலக்கை அடைய உதவியாக இருக்கும், என  இந்து மஹா சபையின் தேசிய செயலாளர் பூஜா ஷகுன் பாண்டே தெரிவித்துள்ளார்.

உண்மையில், பிரிவினைவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டும் விதமாக இந்த நாட்காட்டி இருப்பதாகவும், இதை வெளியிட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இஸ்லாமிய மத தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இஸ்லாமிய மதத்தினரின் நம்பிக்கையயையும், அவர்களின் புனித தலங்களையும் இவ்வாறு குறிப்பிடுவது அவர்களை புண்படுத்துவது மட்டுமின்றி, மத பிரிவினைவாதத்திற்கு வழி வகுக்கும் செயல் என்பதும்.

Comments

Popular posts from this blog

பர்மா பயங்கரவாத அரசின் இராணுவத்தால் இனவழிப்பு செய்யப்படும் முஸ்லீம்கள்

மலேசியா  மதரசாவில் பயங்கர தீ விபத்து -  25 பேர்  பலி

தவளைகளை கொன்றால் பல நோய்கள் உருவாகும் என 1400 வருடங்களுக்கு முன்பே எச்சரித்த நபி